தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மும்பை வந்த ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்: சிறப்பான வரவேற்பு

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இன்று அதிகாலை மும்பை வந்த ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்ஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்

Updated On :19 அக்டோபர் 2022, 9:09 am

IANS


மும்பை: இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இன்று அதிகாலை மும்பை வந்த ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்ஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய ஐ.நா. பொதுச் செயலரை, ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் ருசிரா கம்போஜ், மகாராஷ்டிர முதன்மை செயலாளர் எம்.கே. ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் வரவேற்றனர். இவர்களுடன் மும்பை ஆட்சியர், காவல்துறை ஆணையர், காவல்துறை உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

அன்டோனியோ குட்டெரெஸ், மும்பையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப பன்னாட்டு அமைப்பான ஐ.நா.வில் உடனடியாக சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை திட்டத்தைப் பிரதமா் மோடியுடன் இணைந்து குஜராத்தில் வியாழக்கிழமை (அக். 20) குட்டெரெஸ் தொடக்கிவைக்கவுள்ளாா். வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தையையும் நடத்தவுள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.