ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆந்திரத்தில் 3-வது நாளாக ராகுல் நடைப்பயணம்

ஆந்திரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:39 am

DIN

ஆந்திரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டவும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

தமிழகம், கேரளம், கர்நாடகத்தைத் தொடர்ந்து ஆந்திரத்தில் தற்போது நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

ஆந்திரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக இன்று கர்னூல் பகுதியில் இருந்து நடைப்பயணத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதுடன் அவருடன் பயணம் செய்து வருகின்றனர். நாளை(அக்.21) வரை அவர் ஆந்திரத்தில் பயணம் மேற்கொள்கிறார். 

கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.