வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வேலை கேட்டு வந்த 1 லட்சம் விண்ணப்பங்கள்

விமான ஊழியர்களின் பணி கோரி 72,000 விண்ணப்பங்களும் கடந்த இரண்டு மாதத்தில் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 அக்டோபர் 2022, 9:20 am

DIN

புது தில்லி: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 1,752 விமானிகளுக்கான வேலை விண்ணப்பங்களும், விமான ஊழியர்களின் பணி கோரி 72,000 விண்ணப்பங்களும் கடந்த இரண்டு மாதத்தில் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் மேலாண்மை நிர்வாகப் பணிகளுக்காக முதுநிலைப் பட்டதாரிகளிடமிருந்து 25,000 விண்ணப்பங்களும் வரப்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது, ஏர் இந்தியா நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 8,000 பேர் நிரந்தர ஊழியர்கள் மற்றவர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றுவோர். 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்களது பங்கினை 30 சதவீதம் அதாவது தற்போதிருப்பதை விட மூன்று மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

குறிப்பிட்ட அளவில் மட்டுமே ஊழியர்களை நியமித்ததால், கடந்த தலைமுறை ஒட்டுமொத்தமாக ஏர் இந்தியாவில் பணியாற்றும் வாய்ப்பைப் இழந்துவிட்டது. இந்த இடைவெளியை சரி செய்து, உலகின் மிக முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் முதன்மையானதாக ஏர் இந்தியாவைக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஏர் இந்தியாவின் மூத்த மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி சுரேஷ் தத் திரிபாதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஏர் இந்தியாவில் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள். ஏர் இந்தியாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும் தொடர்ந்து பலரும் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இதுவரை ஏர் இந்தியா பற்றி கூறிவந்த அனைத்தும் மாறிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.