மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

எரிபொருள் டேங்கர் வெடித்தது: வேடிக்கை பார்க்கச் சென்றவர்களில் ஒருவர் பலி; 23 பேர் காயம்

மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், புதன்கிழமை அதிகாலையில், சாலையில் டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து வெடித்துச் சிதறியதில், வேடிக்கை பார்க்கச் சென்ற ஒரு பெண் பலியானார். 23 பேர் படுகாயமடைந்தன

News image

கோப்புப் படம்

Updated On :26 அக்டோபர் 2022, 12:22 pm


கார்கோன்: மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், புதன்கிழமை அதிகாலையில், சாலையில் டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து வெடித்துச் சிதறியதில், வேடிக்கை பார்க்கச் சென்ற ஒரு பெண் பலியானார். 23 பேர் படுகாயமடைந்தனர்.

கார்கோன் மாவட்டம் அஞ்சன்கோன் கிராமத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த எரிபொருள் நிரப்பிய டேங்கர், சாலையின் வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தங்கள் கிராமத்தில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அறிந்த ஊர் மக்கள் சம்பவ இடத்துக்குத் திரண்டனர்.

அப்போது, அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில், டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. இதில், அங்கே இருந்த ஒரு பெண் பலியானார். 23 பேர் காயமடைந்தனர். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் நிறுவனத்துக்குச் சொந்தமான டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் 19 வயதான ரங்குபாய் என்ற பெண் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் இந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டேங்கர் கவிழ்ந்ததும் அதிலிருந்து குதித்துத் தப்பிடியோடிய ஓட்டுநர் மற்றும் உதவியாளரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

டேங்கர் லாரி கவிழ்ந்த நிலையில், ஏராளமான கிராம மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். அப்போது திடீரென டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.