சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தாணே அருகே ஓடும் பேருந்தில் தீ விபத்து: 70 பயணிகள் உயிர் தப்பினர்!

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 70 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். 

News image
Updated On :28 அக்டோபர் 2022, 9:57 am

DIN

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 70 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். 

மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து பிவாண்டிச் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காலை 9.50 மணிக்கு, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்தது. 

தீப்பற்றியதை கவனித்த ஓட்டுநர் சில நிமிடங்களில் பேருந்தை நிறுத்தி, பயணிகளை எச்சரித்தார். உடனே பேருந்தில் இருந்து 70 பயணிகள் கீழே இறங்கினர். 

உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆர்.டி.எம்.சி குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர், பேருந்தில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.