தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐஐடிகள் நாட்டிற்கு பெருமை சேர்ப்பவை: குடியரசுத் தலைவர்

கல்வி நிறுவனங்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் எனவும், இந்தியாவினுடைய முழுத்திறனையும் கல்வியில் செலுத்தி அதற்கான பலனைப் பெற வேண்டும் எனவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 11:30 am

DIN

கல்வி நிறுவனங்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் எனவும், இந்தியாவினுடைய முழுத்திறனையும் கல்வியில் செலுத்தி அதற்கான பலனைப் பெற வேண்டும் எனவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

ஐஐடி தில்லி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 60 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் இறுதியில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசியதாவது: “ இந்தியாவில் எண்ணற்ற திறமைசாலிகள் உள்ளன. அவர்களின் திறனை இந்தியா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய கல்வி நிறுவனங்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். புதுமையான கற்றல் மற்றும் கற்பிக்கும் முறைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஐஐடிகள் நாட்டிற்கு பெருமை சேர்ப்பவை. ஐஐடிகளின் கதை சுதந்திர இந்தியாவின் கதையாகும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.