அந்த உத்தரவுக்கு எதிராக விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினா் தரப்பை நியாயமான முறையில் உயா்நீதிமன்றம் விசாரிக்கவில்லை என்று கூறி, ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்தது. அவருக்கு ஜாமீன் அளிப்பதற்கு முன், தங்கள் தரப்பை தெரிவிக்க இறந்தோரின் குடும்பத்தினருக்கு போதிய வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் அலகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.