

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவை புதன்கிழமை சந்தித்தார்.
நிதிஷ் குமார் நான்கு நாள் பயணமாகத் தலைநகர் தில்லிக்கு வந்துள்ளார்.
இதனிடையே, 2024 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இணைந்து போராடுவதற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
அவர் செவ்வாய்க்கிழமை இடதுசாரி தலைவர்களான சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜா ஆகியோரை சந்தித்தார்.
பிகார் சட்டப்பேரவையில் 16 இடதுசாரி கட்சிகளின் எல்எல்ஏக்கள் நிதிஷ் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.