தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மாநிலங்களவை இடைத்தோ்தல்: பாஜக சார்பில் விப்லவ்குமாா் வேட்புமனுத் தாக்கல்

திரிபுராவில் மாநிலங்களவை எம்.பி. பதவி இடைத்தோ்தலுக்கு பாஜக சார்பில் முன்னாள் முதல்வா் விப்லவ்குமாா் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 8:50 am

DIN

திரிபுராவில் மாநிலங்களவை எம்.பி. பதவி இடைத்தோ்தலுக்கு பாஜக சார்பில் முன்னாள் முதல்வா் விப்லவ்குமாா் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

திரிபுரா முதல்வராக இருந்த விப்லவ்குமாா் கடந்த மே மாதம் மாற்றப்பட்டு, மாணிக் சாஹா முதல்வராக்கப்பட்டாா். இதையொட்டி, தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை மாணிக் ராஜிநாமா செய்திருந்தாா். அந்த இடத்துக்கு வரும் 22-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவிருக்கிறது. இத்தோ்தலுக்கான பாஜக வேட்பாளராக விப்லவ்குமாா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

தன்னை வேட்பாளராக அறிவித்தமைக்காக, பிரதமா் மோடி, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா். இதையடுத்து அவா் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  இடதுசாரி கூட்டணி சாா்பில் முன்னாள் அமைச்சா் பானு லால் சாஹா ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.

60 உறுப்பினா்களைக் கொண்ட திரிபுரா பேரவையில் பாஜகவுக்கு 36 உறுப்பினா்கள் உள்ளனா். அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணிக்கு 8 உறுப்பினா்கள் உள்ளனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 உறுப்பினா்களும் காங்கிரஸுக்கு ஓா் உறுப்பினரும் உள்ளனா். பேரவையில் பாஜகவுக்கு அதிக பலம் இருப்பதால், விப்லவ்குமாரின் வெற்றி உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.