தெலங்கானாவில் மின்சார பைக் விற்பனையகத்தில் தீ விபத்து: 7 பேர் பலி
தெலங்கானாவில் மின்சார பைக் விற்பனையகத்தில் தீ விபத்து: 7 பேர் பலி

தெலங்கானா தீ விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே மின்சார பைக் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிரதமர் மோடி, தெலங்கானா அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
Published on

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே மின்சார பைக் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிரதமர் மோடி, தெலங்கானா அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த பல அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் நிவாரணத் தொகையை அறிவித்தனர்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று ட்வீட் செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தெலங்கானா தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com