தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஜம்மு - காஷ்மீரில் பேருந்து விபத்து: 4 பேர் பலி

ஜம்மு - காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

News image
படம்: டிவிட்டர்
Updated On :15 செப்டம்பர் 2022, 8:36 am

DIN

படம்ஜம்மு - காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

பூஞ்சிலிருந்து ரஜோரி நோக்கி இன்று காலை பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தபோது மஞ்சகோட் தாலுகா, பீம்பெர் காலி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

பள்ளத்தில் விழுந்த பேருந்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், காவல்துறை, ராணுவம், சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை காயங்களுடன் மீட்டு மருத்துமனைக்கு அனுப்பியுள்ளதாகவும் தாசில்தார் ஜாவெத் செளத்ரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று காலை பூஞ்ச் ​​மாவட்டத்தில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலியான நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக விபத்து ஏற்பட்டிருப்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.