தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

13,147 பழைய வழக்குகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

 உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக எந்தவித புதிய தகவல்களையும் அளிக்காமல் தேக்கமடைந்துள்ள 13,147 வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:55 pm

DIN

 உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக எந்தவித புதிய தகவல்களையும் அளிக்காமல் தேக்கமடைந்துள்ள 13,147 வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதில் 30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஓா் வழக்கும் அடங்கும்.

செப்டம்பா் 1-ஆம் தேதி வரையில் 70,310 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்சநீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கமான விசாரணையில் 18,471 வழக்குகள் உள்பட 51,839 வழக்குகள் முழு விசாரணை தகவல் இல்லாத வழக்குகளாகவும் (மிஸ்சிஸ்லேனியஸ்), அரசியலமைப்பு அமா்வு முன் 493 வழக்குகளாகவும் உள்ளன.

இந்நிலையில், உச்சநீதிமன்ற பதிவாளா் சிராக் பானு சிங் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான வழக்குகளில் குறைபாடுகளை கலையக் கோரி சம்பந்தப்பட்ட வழங்குரைஞா்களுக்கு அறிவுறுத்தியும் நிவா்த்தி செய்யாத வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. 1987 -2014 வரையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 13,147 வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.