தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

குனோ தேசிய பூங்காவில் நமீபியா சிறுத்தைகளை திறந்துவிட்டார் மோடி! படங்கள்...

நமீபியாவில் இருந்து இந்தியா வந்த சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் சனிக்கிழமை திறந்துவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. 

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவின் சிறப்பு அடைப்புக்குள் சிறுத்தைகளை விடுவித்த பிரதமர் நரேந்திர மோடி.

Published On :

ம.பி:  நமீபியாவில் இருந்து இந்தியா வந்த சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் சனிக்கிழமை திறந்துவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. 

நாட்டில் சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு, இந்தியாவில் சிறுத்தைகள் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து 'திட்ட சீட்டா' மற்றும் நாட்டின் வனவிலங்குகள் மற்றும் வாழ்விடங்களை புத்துயிர் மற்றும் பன்முகப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக 5 பெண், 3 ஆண் சீட்டாக்கள் என 8 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.  

இந்த சிறுத்தைகளை பிரதமர் நரேந்தி மோடி தனது பிறந்தநாளையொட்டி, குனோ தேசிய பூங்காவில் விடுவிப்பதற்காக சனிக்கிழமை காலை மத்தியப்பிரதேசம் வருகை தந்தார். 

பின்னர், குனோ தேசிய பூங்காவில் 3 சிறுத்தைகளை விடுவித்தார். ஃபெடோரா தொப்பியை அணிந்துகொண்டு, கேமரா மூலம் அவைகளை புகைப்படமும் எடுத்தார் மோடி. பின்னர் அடைப்பு எண் ஒன்றில் இருந்து இரண்டு சிறுத்தைகளையும், அடைப்பு எண் இரண்டில் இருந்து மற்றொரு சிறுத்தையையும் விடுவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், முதல்வர்ர் சிவராஜ் சிங் சௌஹான், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பேந்தர் யாதவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அஸ்வினி சௌபே ஆகியோர் கலந்து கொண்டனர்.

Story image

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவின் சிறப்பு அடைப்புக்குள் சிறுத்தைகளை விடுவித்த பிறகு, அதிகாரிகளிடம் பேசும் பிரதமர் நரேந்திர மோடி.

Story image

குனோ தேசிய பூங்காவின் சிறப்பு அடைப்புக்குள் விடுவித்த சிறுத்தைகள்.

Story image

குனோ தேசிய பூங்காவில் திறந்துவிடப்பட்ட மற்றொறு சிறுத்தை

Story image

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவின் சிறப்பு அடைப்புக்குள் சிறுத்தைகளை விடுவித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுடன் பார்த்துக் கொண்டே புகைப்படம் எடுத்தார் மோடி.

Story image

குனோ தேசிய பூங்காவை பார்க்கும் சிறுத்தை 

Story image

கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுத்தையை புகைப்படம் எடுத்த மோடி. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.