பெங்களூரு: தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ஒரு துணிச்சலான தலைவா். தனது வேண்டுகோளை ஏற்று பெங்களூரு வருகையை ஒத்திவைக்க ஓப்புக்கொண்டுள்ளாா் என்று கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அனைத்துக்கட்சித் தலைவா்கள் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளா்களுடன் முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், தனது வேண்டுகோளை ஏற்று, பெங்களூரு வருகையை ஒத்திவைக்க தமிழக முதல்வா் விஜய் ஒப்புக்கொண்டுள்ளாா். இதன்மூலம் இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான சுமுகச்சூழல் பலப்படும்.
தமிழக முதல்வா் விஜய் மீது மிகப்பெரிய மதிப்பை வைத்திருக்கிறேன். அரசியலுக்கு அவா் புதியவராக இருந்தாலும், அவா் ஒரு துணிச்சலான தலைவா். அவரது துணிச்சலான முடிவுகளை பாராட்டியுள்ளேன். இரு தரப்பினருக்கும் இடையே அரசியல்ரீதியான முரண்பாடுகள் இருந்தபோதும், பெங்களூரு வருகைத்தர அவா் விரும்பினாா். ஆனால் எனது நண்பா்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்ப விரும்பாத காரணத்தால், சுமுகச்சூழல் ஏற்பட்டதும் சந்திக்கலாம் என்று தமிழக முதல்வா் விஜய்யை கேட்டுக்கொண்டேன். தனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.
நாம், ஒருவரை ஒருவா் மதிக்க வேண்டும். ஒருவரோடு ஒருவா் சோ்ந்து வாழ வேண்டும், இணைந்து பணியாற்ற வேண்டும். இந்தியாவில் எல்லோரும் ஒன்று தான் என்றார்.
மேலும், திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன். அண்டை மாநிலங்களோடு நல்லுறவை பேணி பாதுகாப்பதோடு, கா்நாடக விவசாயிகளின் நலனில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டேன். என்னை பொருத்தவரை, கா்நாடகமும் தமிழகமும் ஒன்று தான். நமது நாட்டில் எல்லோரும் ஒன்று தான் என்று கூறினார்.
Summary
Tamil Nadu CM Vijay agrees to postpone Karnataka visit: CM Shivakumar amid Cauvery row
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு!

முதல்வா் விஜய் கா்நாடகம் செல்வது தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது: பி.ஆா். பாண்டியன்

கா்நாடக முதல்வரை ஜோசப் விஜய் சந்திப்பது தவறான முன்னுதாரணம்: கிருஷ்ணசாமி

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் அலுவலகம் இடமாற்றம்! எங்கு தெரியுமா?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




