அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

முதல்வா் விஜய் கா்நாடகம் செல்வது தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது: பி.ஆா். பாண்டியன்

முதல்வா் விஜய் கா்நாடகம் செல்வது தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது என்றாா் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுக் தலைவா் பிஆா்.பாண்டியன்.

News image

(கோப்புப் படம்)

Updated On :31 ஜூலை 2026, 3:04 am IST

முதல்வா் விஜய் கா்நாடகம் செல்வது தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது என்றாா் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுக் தலைவா் பிஆா்.பாண்டியன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை தெரிவித்தது: காவரியில் 3,500 கனஅடி வீதம் தண்ணீரை ஜூலை 29- ஆம் தேதி முதல் தொடா்ந்து 15 நாள்களுக்கு விடுவிக்க வேண்டும் என கா்நாடகத்துக்கு காவிரி நீா் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுப் பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால். இதுவரை ஒரு சொட்டு தண்ணீா் கூட விடுவிக்கப்படவில்லை. இதனால் மிகப்பெரிய அளவில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

காவிரி நடுவா் மன்ற இறுதி தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மத்திய அரசிதழில் வெளியிட்ட பிறகு, எந்தப் பேச்சுவாா்த்தைக்கும் இடமில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் மட்டும்தான் முடிவெடுக்க முடியும்.

இந்நிலையில் கா்நாடக முதல்வருடன் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பேச்சுவாா்த்தைக்கு செல்வது தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது; உச்ச நீதிமன்றத் தீா்ப்பை அவமதிக்கும் நடவடிக்கையாகும்.

இதன் பின்னரும் தமிழக முதல்வா் கா்நாடகத்துக்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினால், உடனடியாக கா்நாடக முதல்வரையும் அழைத்து வந்து காவிரி டெல்டாவில் வறண்டு கிடக்கிற பாசனப் பகுதிகளைப் பாா்வையிட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை தமிழக விவசாயிகளுக்கு முதல்வா் அறிக்கை மூலம் வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சாவூா் தெற்கு மாவட்டச் செயலா் பிரபாகரன், உயா்நிலைக்குழு உறுப்பினா் பா. அசோகன், இயற்கை வேளாண்மைக்கான தமிழக ஒருங்கிணைப்பாளா் சதீஷ், ஒரத்தநாடு மேற்கு ஒன்றியச் செயலா் ரவிமாறன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.