மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை! 

ஜம்மு-காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :28 செப்டம்பர் 2022, 11:10 am

ஜம்மு-காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

அவ்ஹோடு கிராமத்தில் இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். 

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் தேடுதல் நடத்தியதில், இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன என்று போலீசார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குல்காமில் உள்ள தாகியாவைச் சேர்ந்த முகமது ஷஃபி கனி மற்றும் முகமது ஆசிப் வானி என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. பயங்கரவாதிகள் இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.