அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

நீட் விலக்கு விவகாரம்: மக்களவையிலிருந்து திமுக வெளிநடப்பு

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்

News image
நாடாளுமன்றம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:52 am

DIN

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இரு அவைகளிலும் இன்று காலை அலுவல்கள் தொடங்கிய நிலையில், மக்களவையில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் விவகாரம் குறித்து பேச திமுக எம்.பி.க்கள் அனுமதி கோரினார். 

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருக்கும் தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி திமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். 

ஆனால், அவைத் தலைவர், இதுகுறித்து பேசுவதற்கு அனுமதி மறுத்த நிலையில், அதனைக் கண்டித்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.