ஒமைக்ரான்-எக்ஸ்இ இருக்கிறது, ஆனால் இல்லை: ஏன் இந்த தடுமாற்றம்?

ஒமைக்ரானின் புதிய உருமாற்ற வகையான எக்ஸ்இ கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபா் மும்பையில் கண்டறியப்பட்டுள்ளார் என்று நேற்று மாலை செய்திகள் வெளியாகின. 
ஒமைக்ரான்-எக்ஸ்இ இருக்கிறது, ஆனால் இல்லை
ஒமைக்ரான்-எக்ஸ்இ இருக்கிறது, ஆனால் இல்லை

ஒமைக்ரானின் புதிய உருமாற்ற வகையான எக்ஸ்இ கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபா் மும்பையில் கண்டறியப்பட்டுள்ளார் என்று நேற்று மாலை செய்திகள் வெளியாகின. 

அதாவது, பிருஹன்மும்பை மாநகராட்சி அதிகாரி கூறியதாக இந்த தகவல் உறுதியும் செய்யப்பட்டிருந்தது.

கரோனா பரிசோதனை மேற்கொண்ட 376 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் மும்பையிலிருந்து மட்டும் 230 பேரின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 228 போ் ஒமைக்ரான் வகை தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எஞ்சிய இரண்டு போ் கப்பா மற்றும் எக்ஸ்இ வகை தீநுண்மிகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவ்விரு தீநுண்மிகளால் பாதிக்கப்பட்டவா்களின் உடல்நிலை சீராக உள்ளது.

ஒமைக்ரான் வகையான பிஏ.2 தீநுண்மியைவிட எக்ஸ்இ வகை தீநுண்மி 10 சதவீதம் வேகமாகப் பரவக் கூடியதாக தென்படுகிறது’’ என்று தெரிவித்தாா். இந்த புதிய வகை தீநுண்மி முந்தைய கரோனா வகைகளைவிட வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்திருந்தது.

இதனால், நாட்டுக்குள் உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டதாக செய்திகளும் வெளியாகின. 

ஆனால், திடிரென மும்பையில் உருமாறிய எக்ஸ்இ வகை கரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாக பிஐபி மகாராஷ்டிரம் வெளியிட்ட செய்தியில், “பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவரின் மருத்துவக் கோப்புகள் அனைத்தையும் மரபணு நிபுணர்கள் சோதனை செய்தனர். தற்போதைய சான்றுகளின்படி, எக்ஸ்இ வகை கரோனாவால் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 50 வயதுடைய பெண், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் கரோனா இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு நாடுகளுக்கு அவர் பயணம் செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கெல்லாம் மேலாக, மத்திய அரசிடமிருந்து எக்ஸ்இ தொற்று குறித்து எந்த தகவலும் வரவில்லை. எனவே எங்களால் எதையும் உறுதி செய்ய இயலாது என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியிருக்கிறார்.

பிருஹன்மும்பை மாநகராட்சி, எக்ஸ்இ வகை கரோனா மும்பையில் உறுதி செய்யப்பட்டிருப்பது குறித்து நேற்று தகவல் வெளியிட்டிருக்கும் நிலையில், மகாராஷ்டிர அமைச்சரோ மத்திய அரசிடமிருந்து இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. எனவே மாநில அரசு தரப்பிலிருந்து எதையும் உறுதி செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.

ஏன் இந்த குழப்பம்?

புதிய வகை எக்ஸ்இ கரோனாவை ஜிஐஎஸ்ஏஐடி என்ற சர்வதேச தரவுகள் மையம் உறுதி செய்துவிட்ட போதிலும், இந்தியாவில் செயல்படும் ஐஎன்எஸ்ஏசிஓஜி மீண்டும் ஒரு முறை தொற்றின் மரபணு வரிசைமுறையை தேசிய ஆய்வகத்தில் பரிசோதித்து உறுதி செய்த பிறகே மத்திய அரசு அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். ஜிஐஎஸ்ஏஐடி என்ற அமைப்பு வைரிஸில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்துவருகிறது.

முதல் நோயாளி யார்?

எக்ஸ்இ தொற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 50 வயதுடைய பெண், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளார். அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்த அவர் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார். அவரது கரோனா மாதிரிகள் மரபணு வரிசைமுறை ஆய்வுக்குள்படுத்தப்பட்டதில், பிரிட்டனில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட எக்ஸ்இ வகை என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com