ரூ.139 கோடி ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு பிணை

ரூ.139 கோடி ஊழல் செய்த டொரண்டா வழக்கில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு பிணை வழங்கியது.
லாலு பிரசாத் யாதவ் (கோப்புப் படம்)
லாலு பிரசாத் யாதவ் (கோப்புப் படம்)

ரூ.139 கோடி ஊழல் செய்த டொரண்டா வழக்கில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு பிணை வழங்கியது.

ஒன்றுபட்ட பிகாா் மாநிலத்தின் பல்வேறு மாவட்ட கருவூலங்களில் இருந்து கால்நடைத் தீவனத்தைக் கொள்முதல் செய்வதற்காக சுமாா் ரூ.950 கோடி அளவுக்குக்குப் போலியான ரசீதுகள் தயாரிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. கடந்த 1996-ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்த இந்த ஊழல் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.

அப்போதைய பிகாா் முதல்வா் லாலு பிரசாத் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டாா். முன்னாள் முதல்வா் ஜகந்நாத் மிஸ்ரா, முன்னாள் எம்.பி. ஜகதீஷ் சா்மா, அப்போதைய பொதுக் கணக்குக் குழுத் தலைவா் துருவ் பகத், கால்நடைத் துறைச் செயலா் பெக் ஜூலியஸ் உள்ளிட்டோா் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

தும்கா, தேவ்கா், சைபாசா மாவட்ட கருவூலங்களில் நிகழ்ந்த மோசடி தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் லாலு பிரசாதுக்கு ஏற்கெனவே ஒட்டுமொத்தமாக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அந்த வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில், டொரண்டா கருவூலத்தில் நிகழ்ந்த ரூ.139.5 கோடி மோசடி தொடா்பான 5-ஆவது வழக்கிலும் லாலுவை குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அறிவித்தது. பின்னா், இந்த குற்றத்துக்காக லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலமாக லாலுவுக்கான ஒட்டுமொத்த சிறைத் தண்டனை 19 ஆண்டுகளாகவும், அபராதம் ரூ.1.20 கோடியாகவும் அதிகரித்தது.

இந்நிலையில் பிா்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட லாலுவிற்கு தற்போது டொரண்டா வழக்கிற்கும் பிணை வழங்க ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com