தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தொடரும் விபத்துகள்: 1400 மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெற்ற ஒலா

இரு சக்கர மின்சார வாகனங்கள் வெடித்து விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகிவருவதால் உற்பத்தி நிறுவனங்கள் மின்சார வாகனங்களை திரும்ப பெறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :24 ஏப்ரல் 2022, 6:07 am

DIN

நாடு முழுவதும் இரு சக்கர மின்சார வாகனங்கள் தீ பிடித்து விபத்துக்குள்ளாகி வரும் நிலையில், 1,441 மின்சார ஸ்கூட்டர்களை ஒலா நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த மார்ச் 26ஆம் தேதி, புணேவில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இது தனித்த சம்பவம் என்பது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ விபத்துக்குள்ளான ஸ்கூட்டர் இடம்பெற்ற தொகுதியில் உள்ள அனைத்து ஸ்கூட்டர்களின் நிலை குறித்தும் விரிவான சோதனை நடத்தப்படவுள்ளது. எனவே, அந்த 1,441 வாகனங்களை தானாக முன்வந்து திரும்ப பெறுகிறோம். 

அந்த ஸ்கூட்டர்களை எங்கள் சேவை பொறியாளர்கள் சோதனை செய்வார்கள். பேட்டரி அமைப்புகள், வெப்ப அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை சோதனைக்குள்ளாக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பரிந்துரைக்கப்பட்ட தரத்திற்கு ஏற்ப (ஏஐஎஸ் 156) பேட்டரி அமைப்புகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கூடுதலாக ஐரோப்பிய தரத்திற்கு ஏற்பவும் (இசிஇ136) பேட்டரி அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரு சக்கர மின்சார வாகனங்கள் வெடித்து விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகிவருவதால் உற்பத்தி நிறுவனங்கள் மின்சார வாகனங்களை திரும்ப பெறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

இதேபோன்று, ஒகினாவா ஆட்டோடேக் நிறுவனம் 3,000 வாகனங்களையும் ப்யூர்இவி நிறுவனம் 2,000 வாகனங்களையும் திரும்பபெற்றுள்ளது. இந்த விபத்துகள் காரணமாக, அரசின் சார்பாக ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், உற்பத்தி நிறுவனங்கள் அலட்சியமாக இருக்கும் பட்சத்தில் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.