பாபர் மசூதி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைப்பு

பாபர் மசூதி தொடர்பான அனைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாபர் மசூதி  இடிக்கப்படுவதற்கு முன்பு
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு

பாபர் மசூதி தொடர்பான அனைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக் கலவரங்கள் வெடித்தன. அவற்றில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக, மும்பை போன்ற நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களும் நடந்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அச்சம்பவம் தொடர்பாக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் நீதிமன்ற அவமதிப்பு  வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பின்போது...
பாபர் மசூதி இடிப்பின்போது...

மசூதி இடிப்பிற்குப் பின் எழுந்த வன்முறைப் போராட்டங்கள், தாக்குதல்கள் போன்ற  பல்வேறு வழக்குகளில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com