
காஷ்மீருக்கு விரைவில் ரயில் சேவை
ஸ்ரீநகர்: 2023ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் பல நல்ல மாற்றங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அதில் முக்கியமானதாக, காஷ்மீருக்கு நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ரயில் சேவை தொடங்கப்படவிருக்கிறது.
காஷ்மீரில் ரயில் சேவை தொடங்குவதற்கான பல்வேறு இடர்பாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
ஜம்மு பகுதியில் ராம்பன் செக்டாரில் மிகப்பெரிய சுரங்கப்பாதை அமைக்கும் பணியை இந்திய ரயில்வே மேற்கொண்டு நிறைவு செய்திருப்பதும், இதற்கான ஒரு முன்னோட்டம்தான்.
இதையும் படிக்க.. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்
12.75 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றுவிட்டதாக திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். இதற்கு பொறியாளர்கள் டி49 என்று பெயரிட்டுள்ளனர். காஷ்மீர், நாட்டின் பிற பகுதிகளோடு ரயில் மூலம் இணைப்பதற்கான பணிகள் விரைவாக தொடங்க வேண்டும் என்பதற்காகவே, இந்த சுரங்கம் அமைக்கும் பணி மிக விரைவாக செய்து முடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!
ஜம்மு - காஷ்மீரின் பொருளாதாரத்தை உயர்த்தும் விதமாக எந்த காலநிலையிலும் செயல்படும் மற்றும் குறைந்த செலவில் அமைக்கப்படும் ரயில் போக்குவரத்து மூலம், தொழில்துறை வளர்ச்சி பெறும், கச்சா பொருள்களைக் கொண்டு வர, வர்த்தகம், சுற்றுலா, வேலை வாய்ப்பு ஆகியவை மேம்பட உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.