
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், மொத்தம் 23 நாள்கள் 17 அமர்வுகளாக டிசம்பர் 29 வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தொடரில், இந்திய - சீனா எல்லையில் வீரர்கள் மோதிக் கொண்ட விவாகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வரும் நாள்களில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, முரளீதரண், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி பேசுகையில்,
ஐ.நா.வுக்கு இந்திய அரசு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினை உணவு வகைகளில் உள்ள ஊட்டச்சத்து குறித்து பிரசாரம் செய்ய பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், தினை உணவின் முக்கியத்துவத்தை கூறும் வகையில், ஜி20 விருந்தினர்களுக்கு தினை வகையிலான உணவை வழங்கலாம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.