சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ராகுல் காந்தியுடன் இணைந்த கமல்ஹாசன்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இணைந்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:41 pm IST

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இணைந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று நாட்டின் தலைநகர் தில்லியை அடைந்துள்ளது. கேரளம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து சென்ற இந்த நடைபயணத்தில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்கினர். 

இந்நிலையில் இந்த ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சனிக்கிழமை தில்லியில் ராகுல்காந்தியுடன் இணைந்து கொண்டார். 

இதற்கான சனிக்கிழமை காலை தில்லியை அடைந்த கமல்ஹாசன் நாட்டின் பன்மைத்துவத்தை பாதுகாக்க ராகுல்காந்தி முன்னெடுக்கும் இந்த நடைபயணத்திற்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தார். 

இந்த நடைபயணத்தில் ராகுல்காந்தி, கமல்ஹாசன் உடன் விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்ப உறுப்பினா்கள், காங்கிரஸ் முக்கியத் தலைவா்கள் உள்பட 40,000 முதல் 50,000 போ் வரை பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.