தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலையில் முன்னேற்றம்! 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதாக மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய் மோடி தெரிவித்துள்ளார். 

News image

பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலையில் முன்னேற்றம்! 

Updated On :29 டிசம்பர் 2022, 6:52 am

பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதாக மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய் மோடி தெரிவித்துள்ளார். 

100 வயதாகும் ஹீராபென் புதன்கிழமை காலை உடல்நலப் பிரச்னைகள் காரணமாக குஜராத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இன்று காலை முதல் அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாகவும், திரவ உணவுகளை எடுத்துக் கொண்டதாகவும் சோமாபாய் மோடி தெரிவித்தார். 

அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

புதன்கிழமை பிற்பகல் தில்லியில் இருந்து அகமதாபாத் சென்றடைந்த பிரதமர் மோடி, தனது தாயாரைச் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் மருத்துவமனையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.