ருமேனியா சென்றடைந்தது ஏர் இந்தியா விமானம்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியாவிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டை சென்றடைந்தது.
ருமேனியா சென்றடைந்தது ஏர் இந்தியா விமானம்
ருமேனியா சென்றடைந்தது ஏர் இந்தியா விமானம்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியாவிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டை சென்றடைந்தது.

ரஷியா உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்தியாவிலிருந்து இன்று காலை 3.40 மணியளவில் ருமேனியாவிற்கு ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. 

அங்கு சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லை வந்தடைந்த இந்தியர்கள் இந்திய அரசு அதிகாரிகள் மூலம் புகாரெஸ்ட் அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து கிளம்பிச் சென்ற ஏர் இந்திய விமானம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டை சென்றடைந்தது. இந்தத் தகவலை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுதவிர இந்தியா விமானங்கள் ஹங்கேரிக்கும் இயக்கப்படவுள்ளன.

முன்னதாக, புகாரெஸ்டுக்கு 2 விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு இயக்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்திருந்தது. ஆனால், அவை திட்டமிட்டபடி புறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com