குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி

"லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தி, நமது தேசிய கீதத்தைப் பாடினர். அவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களைப் போலவே நம் குழந்தைகளும் அதையே செய்கிறார்கள்"
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில், பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று, 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய மோடி, "இந்தியாவில் இருந்து பல சிலைகள் கடத்தி செல்லப்பட்டு, பல்வேறு நாடுகளில் விற்கப்பட்டன. அந்த சிலைகளை திரும்ப கொண்டு வருவது எங்கள் பொறுப்பு. 2013ஆம் ஆண்டு வரை 13 சிலைகள் மட்டுமே கொண்டுவரப்பட்டன. 

ஆனால் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிலைகளை இந்தியா கொண்டு வந்தோம்.

தான்சானியாவைச் சேர்ந்த கிலியும் நீமாவும் இந்திய இசையில் ஆர்வம் காட்டியுள்ளனர். லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தி, நமது தேசிய கீதத்தைப் பாடினர். அவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களைப் போலவே நம் குழந்தைகளும் அதையே செய்கிறார்கள். 

உடன்பிறந்த இரட்டையர்களான கிலி மற்றும் நீமாவை போல, பிரபலமான பாடல்களுக்கு ஏற்ப உதடுகளை ஒத்திசைத்து விடியோ எடுக்குமாறுநான் அனைவரையும், குறிப்பாக வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குழந்தைகள் கேட்டுக்கொள்கிறேன். 'ஒரே இந்தியா வளமான இந்தியா' என்பதை மறுவரையறை செய்து இந்திய மொழிகளை பிரபலப்படுத்துவோம்.

சிவராத்திரி, ஹோலி என பண்டிகைகள் நெருங்கி வருகின்றன. 'உள்ளூர் பொருள்களுக்கு முன்னுரிமை' அளிப்பதை கடைபிடித்து, உள்ளூர் சந்தைகளில் இருந்து கொள்முதல் செய்து பண்டிகைகளை கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாடுங்கள். ஆனால் எச்சரிக்கையாக இருக்க மறக்காதீர்கள்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com