காவலர்களைத் தொடர்ந்து.. மும்பையில் 61 மருத்துவர்களுக்கு கரோனா

கடந்த சில நாள்களாக காவல் துறையினர் அதிக அளவு கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மருத்துவர்களிடையே கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மும்பையில் 61 மருத்துவர்களுக்கு கரோனா
மும்பையில் 61 மருத்துவர்களுக்கு கரோனா

கடந்த சில நாள்களாக காவல் துறையினர் அதிக அளவு கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மருத்துவர்களிடையே கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதேபோன்று புதியவகை கரோனாவான ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,135 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மும்பையில் 61 மருத்துவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணிக்கும் மருத்துவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அந்தவகையில் மும்பையில் நாலந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 84 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட மருத்துவர்களில் பெரும்பாலானோர் பாட்னா தேசிய மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று அம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவில் நேற்று மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என 100-க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோன்று சிலிகுரியிலுள்ள வடக்கு மேற்கு வங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 25 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com