வெறுப்பைத் தோற்கடிக்க தேர்தலே சரியான வாய்ப்பு என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா சனிக்கிழமை அறிவித்தார்.
மேலும், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வரும் 15-ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அவா் அறிவித்தாா்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,
"வெறுப்பைத் தோற்கடிக்க இதுவே சரியான வாய்ப்பு" என 5 மாநில தேர்தலைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
5 மாநிலத் தேர்தல்
கோவா (40 தொகுதிகள்), பஞ்சாப் (117 தொகுதிகள்), உத்தரகண்ட் (70 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரே கட்டமாகவும்,
மணிப்பூா் (60 தொகுதிகள்) மாநிலத்தில் பிப்ரவரி 27 மற்றும் மாா்ச் 3-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாகவும்,
உத்தரப் பிரதேசத்தில்(403 தொகுதிகள்) பிப்ரவரி 10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடத்தப்படும், மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

41 ராணிப்பேட்டை

ஆட்சி சிறப்பாக இருக்கும்! செங்கோட்டையன் பேட்டி | TVK | Sengottayan

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


