அமர்ஜவான் ஜோதி இன்று இடமாற்றம்: ராகுல் காந்தி வருத்தம்

தில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியை தேசிய போர் நினைவகத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமர்ஜவான் ஜோதி இன்று இடமாற்றம்
அமர்ஜவான் ஜோதி இன்று இடமாற்றம்

தில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியை தேசிய போர் நினைவு சின்னத்துடன் இணைப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக 1972 குடியரசு தினத்தன்று இந்தியா கேட் பகுதியில் அமர்ஜவான் ஜோதி எனப்படும் அணையா விளக்கு ஏற்றப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு தில்லியில் திறக்கப்பட்ட தேசிய போர் நினைவு சின்ன விளக்குடன் அமர்ஜவான் ஜோதி விளக்கு இன்று இணைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு வருத்தம் தெரிவித்து ராகுல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“போர் வீரர்களுக்காக ஏற்றப்பட்ட அமர்ஜவான் ஜோதி இன்று அணைக்கப்படுவது வருத்தம் அளிக்கின்றது. சிலரால் தேசப்பற்றையும் தியாகத்தையும் புரிந்து கொள்ள முடியாது. நமது வீரர்களுக்காக மீண்டும் அமர்ஜவான் ஜோதியை ஏற்றுவோம்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com