பூஸ்டர் தடுப்பூசிக்கு இடைவெளி குறைப்பு

இந்தியாவில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியாவில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் கரோனா இரண்டாவது தடுப்பூசி செலுத்திய 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கரோனா தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திய பிறகு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்களுக்கு பிறகு, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

அறிவியல் ஆதாரங்கள் மற்றும் உலக நாடுகளின் அடிப்படையில், இதனை 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களாக குறைக்க வேண்டும் என துணைக்குழு அளித்த பரிந்துரையை நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப குழு ஏற்று கொண்டது.

இதனால் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com