கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு

கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2022, 4:33 am

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் என்ற இடத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர்கள் இருவருமே தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். 

இது குறித்து, கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், "விழிஞ்சம் பகுதியில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், கவலை கொள்ளத் தேவையில்லை. அப்பகுதியில், சுகாதாரத்துறை நிலைமையை ஆய்வு செய்துள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நோரோ வைரஸ் பாதிப்புக்குள்ளான 2 குழந்தைகளின் உடல்நிலை சீராக உள்ளது" என்று தெரிவித்தார்.

நோரோ வைரஸ் என்பது புது வகையான தீநுண்மி தொற்று இல்லை. பல காலமாக சமூகத்தில் பரவியிருக்கும் ஒரு வகையான பாதிப்புதான் என்றாலும், குளிா் மற்றும் மழைக் காலங்களில் இதன் தாக்கம் அதி தீவிரமாக இருக்கும். அந்த காலங்களில்தான் குழந்தைகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் மற்றும் முதியவா்கள் அதிக அளவில் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.