மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இன்று கசப்பாக இருக்கலாம், ஆனால்..: அக்னிபத் பற்றி பிரதமர் பேச்சு

அரசின் சில முடிவுகள் இன்று கசப்பாக இருக்கலாம், ஆனால் அவை நாளை கனி கொடுப்பதாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :20 ஜூன் 2022, 3:43 pm

DIN


அரசின் சில முடிவுகள் இன்று கசப்பாக இருக்கலாம், ஆனால் அவை நாளை கனி கொடுப்பதாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமரின் இந்தக் கருத்து பேசுபொருளாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கள்கிழமை) கர்நாடகம் சென்றடைந்தார். முதல் நாளான இன்று பெங்களூருவில் ரூ. 28,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இதன்பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:

"எங்களது முன்னெடுப்புகள் சில தற்போது கசப்பாகத் தெரியலாம். ஆனால், வரும் நாள்களில் அவை கனிகளைக் கொடுக்கும். அரசுத் துறைக்கு நிகராக தனியார் துறையும் முக்கியமானது. இரண்டிலும் சரிசமமான  வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மக்களின் மனநிலை மட்டும் மாறவில்லை. தனியார் துறை பற்றி அவர்கள் நல்லவிதமாகப் பேசமாட்டார்கள்.

பெருந்தொற்று காலத்தில் பெங்களூருவில் உள்ள இளம் வல்லுநர்கள், அரசின் தலையீடு இல்லையென்றால், நாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம் என்பதைக் காட்டினர்.  

பெங்களூருவின் வளர்ச்சி என்பது லட்சக்கணக்கானோரது கனவுகளின் வளர்ச்சியாகும். நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள், தங்களது கனவுகளை நனவாக்குவதற்கான கனவு இடமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது. 

நாட்டை கட்டமைப்பதற்குத் தனியார் நிறுவனமும் பங்காற்றுகிறது. அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.