‘திமுகவை மதிக்கிறோம், ஆனால்...’: ராகுல் காந்தி பேசியது என்ன?

லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி திமுகவை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
ராகுல்காந்தி (Twitter)
ராகுல்காந்தி (Twitter)

லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி திமுகவை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இந்தியாவிற்கான யோசனைகள் எனும் தலைப்பில் லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மாநிலக் கட்சிகளை மதிப்பதாகவும் பண பலம் மற்றும் அதிகார பலத்தால் பாஜக ஊடகங்களை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டு பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர், “நாட்டில் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது. மக்களின் கருத்தைப் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபடும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி செயல்படும். இது ஒரு சித்தாந்தப் போர். திமுகவை தமிழ் அரசியல் அமைப்பாக மதிக்கிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்குத் தான் தேசிய அளவில் சித்தாந்தம் உள்ளது. தேசிய அளவில் பாஜகவை எதிர்த்துப் போராடுவது காங்கிரஸால் மட்டுமே முடியும், சித்தாந்தம் இல்லாததால் மாநிலக் கட்சிகளால் இந்தப் போராட்டத்தை நடத்த முடியாது” எனத் தெரிவித்தார்.

லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் தேர்தல் கூட்டணிகள் குறித்து ராகுல்காந்தி பேசியுள்ளது முக்கிய கவனம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com