நவ.23-ல் பெங்களூரு-புணே இடையே முதல் விமானச் சேவை தொடக்கம்!

நவம்பர் 23 முதல் பெங்களூருவில் இருந்து புணேவிற்கு முதல் விமானச் சேவையை ஆகாசா ஏர் விமான நிறுவனம் தொடங்க உள்ளது.
நவ.23-ல் பெங்களூரு-புணே இடையே முதல் விமானச் சேவை தொடக்கம்!


நவம்பர் 23 முதல் பெங்களூருவில் இருந்து புணேவிற்கு முதல் விமானச் சேவையை ஆகாசா ஏர் விமான நிறுவனம் தொடங்க உள்ளது. புதிய விமான ஏர்லைன் நெட்வொர்க்கில் ஒன்பதாவது வழித்தடமாக இது அமைய உள்ளது. 

முதன் முதலாக ஆகஸ்ட் 7-ஆம் தேதி செயல்படத் தொடங்கிய விமானச் சேவை, நவம்பர் இறுதிக்குள் சுமார் 58 தினசரி விமானங்களையும், 400 வாராந்திர விமானங்களையும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிகரித்துவரும் தேவை காரணமாக, நவம்பர் 23-ஆம் தேதி பெங்களூரு மற்றும் புணே இடையேயான முதல் சேவையையும்  நவம்பர் 26-ம் தேதி இரண்டாவது சேவையையும் தொடங்க உள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பை, அகமதாபாத், தில்லி, சென்னை, கொச்சி, குவஹாத்தி மற்றும் புணே ஆகிய ஏழு நகரங்களை இணைக்கும் வகையில் பெங்களூருவிலிருந்து தினசரி 20 விமானங்களை ஆகாசா ஏர் நிறுவனம் தற்போது வழங்கிவருகிறது. 

புணே மற்றும் பெங்களூரு ஆகிய இரு இடங்களிலும் தகவல் தொழில்நுட்ப மையங்கள் அதிகம் செயல்பட்டு வருவதால், மலிவு கட்டணத்துடன் இந்த விமான இணைப்பு வழங்கப்படுவதாக ஆகாச ஏர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை வணிக அதிகாரி பிரவீன் ஐயர் கூறினார். 

அகமதாபாத், பெங்களூரு, கொச்சி, சென்னை, மும்பை, தில்லி, குவஹாத்தி, அகர்தலா மற்றும் புணே ஆகிய 9 நகரங்களில் மொத்தம் 13 வழித்தடங்களுடன் அகசா ஏர் படிப்படியாக தனது செயல்பாடுகளை அதிகரித்து வருகிறது.

இந்த விமான நிறுவனம் தனது முதல் விமானச் சேவையை மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு இயக்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com