கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிதியுதவி: கேஜரிவால்

மாசுபாடு காரணமாக கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்குமாறு தில்லி முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிதியுதவி: கேஜரிவால்

மாசுபாடு காரணமாக கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்குமாறு தில்லி முதல்வர் கேஜரிவால், தொழிலாளர் அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு உத்தரவிட்டுள்ளார். 

மாசு அளவு மிகவும் மோசமடைந்து வருவதால், தில்லி என்.சி.ஆரில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்குமாறு மத்திய அரசின் காற்றின் தரக்குழு சனிக்கிழமையன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 

தில்லி முழுவதும் மாசுபாடு காரணமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படாத இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு கட்டுமானத் தொழிலாளிக்கும் ரூ.5000 நிதியுதவி அளிக்குமாறு தொழிலாளர் அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கேஜரிவால் ட்வீட் செய்துள்ளார்.

கரோனா தொற்று நோய்களின் போது தில்லியில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆம் ஆத்மி அரசு நிதி உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com