20 ஆண்டுகளில் முதல் முறை.. தீபாவளிக்குக் குறைந்த பணப்புழக்கம்

கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக, தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படும் வாரத்தில், நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகோரேப் பெயரில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டதால், இந்தியாவின் பணம் செலுத்தும் முறையானது படிப்படியாக வளர்ந்து, இந்தியாவின் பணத்தை முதன்மையாகக் கொண்ட பொருளாதார அமைப்பானது, தற்போது எண்ம பணப்பரிமாற்ற முறைக்கு மாறியிருப்பதாகக் கூறியிருக்கிறது.

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாகவே இது நடந்திருப்பதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை எண்ம முறையில் மாற்ற பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ, பிபிஐ உள்ளிட்ட பல்வேறு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், பணத்தை பரிமாற்றம் செய்வது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டது. வங்கியில் கணக்கு வைத்தில்லாதவர்கள் கூட இதனைப் பயன்படுத்தும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

க்யூஆர் கோடு, என்எஃப்சி உள்ளிட்டவைகளால், இது மேலும் விரிவடைந்திருப்பதாகவும், இந்த முறைக்குள் மிகப்பெரிய நிறுவனங்களும் நுழைந்திருப்பதால் வேகம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com