

குஜராத்தில் உள்ள கெவாடியாவில் பிரதமர் மோடியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் சந்திப்பு நிகழ்த்தினார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள குட்டெரெஸுடன் மோடி நீண்ட நேரம் உரையாடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் முக்கியத்துவமாக ஐ.நா பாதுகாப்பு கன்வுசிலில் நிரந்திர இடம் ஒதுக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாத தடுப்பு பற்றி உரையாடியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை திட்டத்தைப் பிரதமர் மோடியுடன் இணைந்து ஐநா பொதுச் செயலாளர் குட்டெரஸ் தொடக்கிவைத்தார்.
மேலும், நாட்டின் முதல் 24x7 சூரிய சக்தி கிராமமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மொதேராவிற்கும் குட்டெரஸ் பார்வையிட்டு, கிராமத்தைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார்.
அதன்பின்னர். வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் அவா் இருதரப்பு பேச்சுவார்த்தையையும் நடத்தவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.