பாஜகவில் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடக்குமா? சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கேள்வி

பாஜகவில் ஜே.பி.நட்டா தேர்தல் மூலம்தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்

பாஜகவில் ஜே.பி.நட்டா தேர்தல் மூலம்தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் பாம்கர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.23 கோடியே 90 லட்சம் மதிப்பிலான 40 திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் கலந்துகொண்டார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சில வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடைபெற்று தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சி முன்னேறி செல்லும் என நம்புகிறோம்” எனத் பூபேஷ் பாகேல் தெரிவித்தார். 

தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாக பாஜகவினர் முன்வைத்த விமர்சனம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த பூபேஷ் பாகேல், “பாஜகவில் ஜே.பி.நட்டா வலிமையாக உள்ளாரா? காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஏறத்தாழ 8,000 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றுள்ளார். இருந்தும் பாஜகவிற்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக தலைவராக ஜே.பி.நட்டாவை நியமனம் செய்வதற்கான வழிமுறைதான் என்ன? எனக் கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com