கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

கர்நாடகத்தில் அசுத்தமான தண்ணீர் குடித்த இருவர் பலி: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கர்நாடகத்தின் ஹோத்பேட் கிராமத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்த 2 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Published On :

கர்நாடகத்தின் ஹோத்பேட் கிராமத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்த 2 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாத்கிர் மாவட்டத்தின் ஷாஹாபுரா தாலுகாவில் உள்ள ஹோத்பேட் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. கிராமத்தில் உள்ள மக்கள் வாந்தி, பேதி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கண்காணிக்க சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர். 

காலரா நோய் பரவுமோ என அப்பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. பழைய கிணற்றில் இருந்து குழாய் இணைப்புகள் மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

உயிரிழந்தவர்கள் ஹொன்னப்ப கௌடா மற்றும் ஏரம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பழைய கிணற்றில் குடிநீர் விநியோகம் செய்வது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்தனர். 

தண்ணீரின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகளுக்கு இது தெரியும், ஆனால் எதுவும் செய்யவில்லை என்று குடியிருப்பாளர் கூறியுள்ளனர். 

கிணற்று நீர் மற்றும் மேல்நிலைத் தொட்டியின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அவை குடிநீருக்குப் பயன்படுத்தப்படலாம் என முடிவு கிடைத்துள்ளதாக தாலுகா சுகாதார அலுவலர் ரமேஷா குட்டேதர ஷஹாபுரா தெரிவித்தார்.

அதிகாரிகள் சோதனை செய்து வரும் பைப் லைனில் தான் கோளாறு உள்ளது. குடிநீர் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.