நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

‘ரூ. 500-க்கு சிலிண்டர்’: ராகுல் காந்தியின் 8 வாக்குறுதிகள்

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரூ. 500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image

குஜராத் காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி

Updated On :5 செப்டம்பர் 2022, 10:32 am

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரூ. 500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பிரதான கட்சிகள் நேரடியாக களமிறங்கியுள்ளது.

Story image

இந்நிலையில், ஆமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி அளித்த 8 வாக்குறுதிகள்:

1. மாநில மக்களுக்கு ரூ. 10 லட்சம் வரை இலவச மருத்துவம் மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.

2. ரூ. 3 லட்சம் வரை உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

3. ஒரு லிட்டர் பாலுக்கு 5 ரூபாய் மானியமாக கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும்.

4. ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சமையல் எரிவாயு, ரூ. 500-க்கு விற்கப்படும்.

5. பெண்களின் இலவசக் கல்விக்காக 3,000 ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்படும்.

6. கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

7. விவசாயிகளின் மின்சாரக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

8. அரசுப் பணிகளில் ஒப்பந்த முறை நிறுத்தப்படும் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3000 உதவித்தொகை வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.