டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இந்தியாவில் ஒரேநாளில் 5,076 பேருக்கு கரோனா

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 5,076 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
கோப்புப்படம்
Updated On :11 செப்டம்பர் 2022, 4:20 am

DIN

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 5,076 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,076 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,44,95,359 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 47,945 ஆக உள்ளது. 

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 11 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,28,150 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 5,970 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,39,19,264 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கடந்த 24 மணிநேரத்தில் 17,81,723 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  நாட்டில் இதுவரை 214.95 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 3,20,784 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 88.94 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.