காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன்(செப். 30) முடிவடைகிறது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ராஜஸ்தான் முதல்வர், அந்த மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தினால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகினார் கெலாட்

இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகிய இருவரும் தற்போது களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், போட்டியாளர்கள் இருவரும் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி: திக்விஜய் சிங் அறிவிப்பு

சந்திப்பு குறித்து சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று பிற்பகல் என்னை சந்திக்க வந்த திக்விஜய் சிங்கை வரவேற்றேன். கட்சியின் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன். எங்கள் போட்டி சண்டை அல்ல, சக ஊழியர்களுக்கு இடையேயான நட்புரீதியான போட்டி என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம். நாங்கள் இருவரும் விரும்புவது யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்பதுதான்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கெலாட் vs பைலட்: ராஜஸ்தானில் என்ன நடக்கிறது? காங்கிரஸுக்குப் பின்னடைவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம்!

தொகுதி அறிமுகம்: காட்பாடி!

விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்

தொகுதி அறிமுகம்: வேலூா்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

