47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

'கர்நாடக பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 40 தொகுதிகளில் போட்டியிடும்'

வரும் கர்நாடக பேரவைத் தேர்தலில் என்சிபி குறைந்தது 40 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் ஹரி ஆர் தெரிவித்தார். 

News image
கோப்புப் படம்.
Updated On :15 ஏப்ரல் 2023, 1:49 pm

DIN

வரும் கர்நாடக பேரவைத் தேர்தலில் என்சிபி குறைந்தது 40 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் ஹரி ஆர் தெரிவித்தார். 
இதுகுறித்து மும்பையில் அவர் இன்று கூறுகையில், வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் குறைந்தது 40 இடங்களில் போட்டியிடுவோம். பாஜகவின் 4 முதல் 5 எம்எல்ஏக்கள் கட்சியில் சேர எங்களுடன் தொடர்பில் உள்ளனர். 
பெங்களூருவின் முன்னாள் மேயரும் விரைவில் எங்கள் கட்சியில் சேரலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக இன்று மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்தில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. 
2018 தேர்தலின் போது, ​​கர்நாடகத்தில் 14 இடங்களில் என்சிபி போட்டியிட்டது. 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மே 13-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.