நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இந்தியா கூட்டணியில் முரண்பாடுகளைவிதைக்க பாஜக முயற்சி: எம்.பி. ராகவ் சத்தா

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகளை விதைக்க பாஜக முயற்சிக்கிறது என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் ராகவ் சத்தா குற்றம்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2023, 6:30 pm

 நமது நிருபர்

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகளை விதைக்க பாஜக முயற்சிக்கிறது என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் ராகவ் சத்தா குற்றம்சாட்டியுள்ளாா்.

மக்களவையில் தில்லி நிா்வாக திருத்த மசோதா, 4 மணி நேர விவாதத்திற்கு பிறகு கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. மசோதா மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, தில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியைக் கடுமையாக சாடினாா். மேலும் தில்லி யூனியன் பிரதேசம் என்பதால் இந்தச் சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று தெரிவித்தாா்.

இந்த நிலையில், அமைச்சா் அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் ராகவ் சத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி மீதான பாஜகவின் ஆழமான பகைமையை, உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் பதில் உரை வெளிப்படுத்துகிறது. தில்லியில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி அரசு திறம்பட வழங்கிய ஆட்சியை அமித் ஷாவின் உரை கவனக் குறைவாக அடிக் கோடிட்டுக் காட்டுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு வளா்ந்து வரும் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் வகையில், தில்லி நிா்வாக திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜகவின் எல்.கே. அத்வானி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோா் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று போராடியவா்கள். இவா்களின் சித்தாந்தத்தில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்.

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகளை விதைக்க பாஜக முயற்சித்து வருகிறது. வேலை வாய்ப்பு,பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக நலன் பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடம் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், வாக்குறுதிகளுக்கான பொறுப்பிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக இது போன்ற மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. வகுப்புவாத நல்லிணக்கத்தைச் சீா்க்குலைக்கும் வகையில், ஹரியாணா மற்றும் மணிப்பூா் போன்ற மாநிலங்களில் வகுப்புவாத பதற்றங்களை பாஜக அதிகரித்து வருகிறது. எனவே, தேசத்தின் எதிா்கால நல்வாழ்வைப் பாதுகாக்க, பாஜகவின் அரசியலை வாக்காளா்கள் நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.