தமிழ்நாட்டின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியுமா? கனிமொழி

மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி உரையாற்றினார்.
தமிழ்நாட்டின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியுமா? கனிமொழி

மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி உரையாற்றினார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது 2-வது நாளாக இன்று விவாதம் நடைபெற்றது. 

இந்த தீர்மானத்தில் கனிமொழி ஆற்றிய உரையில், 

உச்சநீதிமன்றம் தலையிட்டு மாநிலத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டபுள் எஞ்சின் அரசு என பெருமை பேசும் பாஜக மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் தராதது ஏன்?

பாஜக ஆட்சியில் விலைவாசி மட்டும் உயரவில்லை... பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளது. 

மணிப்பூரில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தக்கியுள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர், வசிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். 

மூன்று மாதங்களை கடந்தும் மணிப்பூர் வன்முறையை தடுக்க பிரதமர் மோடி முன்வரவில்லை, இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணிப்பூர் மக்களை நேரில் சந்திந்து நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம். 

மணிப்பூர் முதல்வரோ குகி இன மக்களை குறைக்கூறி பேசி வருகிறார். கலவரத்தை தடுக்க தவறிவிட்டனர். ஒடிசா ரயில் விபத்துக்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். 

எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள். தமிழ்நாட்டின் வரலாறு பற்றி பிரதமர் மோடிக்கு தெரியுமா? நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையில் இருந்து வந்ததாக சொன்னீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com