பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்னை குறித்து பேச வேண்டும் என்பதே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் நோக்கம் என காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்தார்.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் மூன்றாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை பேசிய நிலையில் தற்போது காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசி வருகிறார்.
அப்போது, 'நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாங்கள் யாரும் யோசிக்கவில்லை. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்னை குறித்து பேச வேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் நாடாளுமன்றத்திற்கு வருமாறு கோரவில்லை, பிரதமரை மட்டுமே வருமாறு நாங்கள் கோரினோம்' என்று பேசினார்.
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசிக்கொண்டிருக்கும்போதே பிரதமர் நரேந்திர மோடியும் மக்களவைக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்குப் பதிலளிக்க உள்ளார்.
இதையும் படிக்க | ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘ரத்தினக் குவியல்...!’

கோழிப் பண்ணைகளில் ஈக்கள் உற்பத்திக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தற்படம் எடுக்கும்போது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு: 13 மணி நேரம் போராடி மீட்ட ராணுவ வீரா்கள்

வேட்புமனு சரிபாா்ப்பு: 20 காரணங்கள்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

