மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: வயநாடு சென்றார் ராகுல்: சிறப்பான வரவேற்பு
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிரதமரின் பொது நிதி, ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஊழலில் ஈடுபட்டுள்ளதால் பிரதமரால் ஊழல் குறித்து பேச முடியாது. பிரதமர் ஆதாரமின்றி எதிர்க்கட்சிகளின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். நாட்டில் ஏழை, எளிய மக்கள் குறித்து பாஜகவுக்கு கவலையில்லை. பிரதமர் இந்தியாவை தவறாக வழிநடத்துகிறார். பிரதமர் அவரது கட்சியில் உள்ளவர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து பேசுவதில்லை.
இதையும் படிக்க: வட மாநிலங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!
மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கு வங்க தேர்தலின் போதும் 16 பேர் உயிரிழந்தனர். மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு எனக் கூறியது போல தற்போது நாடு முழுவதும் பாஜவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கிறது. நாங்கள் அவர்களை இந்தியாவிலிருந்து வெளியேறக் கூறவில்லை. அவர்களை ஆட்சியிலிருந்து வெளியேற கூறுகிறோம். பாஜகவே வெளியேறு என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |

ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


