சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புரி ஜெகந்நாதர் கோயிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு! 

புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வழிபாடு செய்தார். 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2023, 6:22 am

DIN

புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வழிபாடு செய்தார். 

இவருடன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, உள்ளூர் எம்எல்ஏக்கள் ஜெயந்த சாரங்கி மற்றும் லலிதேந்து பித்யாதர் மொகபத்ரா ஆகியோருடன் 30 நிமிடங்களுக்கு மேல் கோயிலுக்குள் இருந்தார். 

Story image

மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் மேரி மாதா மேரி தேஷ் கலை சிற்பத்தையும் கண்டு மகிழ்ந்தார். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர் சஹீத் ஜெய் ராஜ்குருவின் பிறந்த இடத்திற்குச் சென்று அங்கு அவர் மரியாதை செலுத்தினார். 

Story image

பின்னர், புவனேஸ்வர் திரும்பிய அவர், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளார்  மற்றும் 20வது தேசிய சிஏ மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் கலந்துகொள்கிறார். 

சீதாராமன் புதன்கிழமை இரவு ஒடிசாவிற்கு இரண்டு நாள் பயணமாக புவனேஸ்வர் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.