ராணுவ வீரர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்: குடியரசுத் தலைவர் இரங்கல்

ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது என திரெளபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்
குடியரசுத் தலைவர்   திரெளபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு


லடாக்கில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள திரெளபதி முர்மு, லடாக்கில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. 

உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துக்கத்திலிருந்து மீண்டுவர ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு இறைவன் வலிமை கொடுக்க வேண்டும்

சாலைவிபத்தில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம், கியாரி நகருக்கு 7 கி.மீ. தொலைவில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துகுள்ளானது. இதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com